சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தங்கலான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் 'எக்ஸ்' தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களை 'ஒரு ஹாரர் படத்தில் பேயாக பார்க்க முடியுமா?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், 'என்னை ஏன் பேயாக பார்க்க விரும்புகிறீர்கள்?' என்றார்.
மற்றொருவர், 'உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது?' என்று கேட்டார், அதற்கு, 'அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். 'அடுத்த தமிழ் படம் எது?' என்று ஒருவர் கேட்டதற்கு, 'சர்தார் 2. இதில் நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்' என்றார். தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோகனனிடம், ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்டதற்கு, 'நான் அவரது மிகப்பெரிய ரசிகை' என பதிலளித்தார்.